புதுடெல்லி: இடைநீக்கம் செய்யப்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மாவுக்கு பல எப்ஐஆர்களில் கைது செய்ய முடியாதபடி உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு அளித்துள்ளது.
முஹம்மது மீதான அவரது அறிக்கைகளுக்கு எதிராக பதியப்பட்ட ஒன்பது வழக்குகள் மற்றும் தம்மை கைது செய்வதற்கு தடை கோரி அவர் முன்வைத்த மனுவை உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் செவ்வாயன்று, இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் இந்திய யூனியன் உட்பட அனைத்து பிரதிவாதிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையில், இடைக்கால நடவடிக்கையாக, மனுதாரர் மீது கட்டாய நடவடிக்கை எடுக்கப்படாது என்று பெஞ்ச் கூறியது.