பீகார் பாட்னாவில் கடந்தவாரம் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
முன்னாள் காவல்துறை அதிகாரி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஜலாலுதீன். தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தில் பணியாற்றி, தற்போது பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. இயக்கத்தில் செயல்பட்டு வரும் அத்தர் பர்வேஸ். பீகார் மாநிலத்தில் தற்காப்பு கலைகளை பயிற்றுவிப்பதாகக் கூறி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் இஸ்லாமிய இளைஞர்களை வரவழைத்து ஆயுதப் பயிற்சி அளித்திருக்கிறார்கள்.
‘இந்தியா விஷன் 2047″ என்கிற திட்டத்தை வகுத்து ‘கோழை ஹிந்துக்களை அடிபணிய வைப்பதே குறிக்கோள்’ என்றும், ‘இந்த இலக்கை எட்டுவதற்கு 10 சதவிகித இஸ்லாமியர்கள் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பில் இணைய வேண்டும்’ என்றும், மத ரீதியான பல்வேறு கோஷங்களை முன்வைத்து ஹிந்துக்களுக்கு எதிராக இளைஞர்களை தூண்டிவிட்டதாகவும் பீகார் காவல்துறை தெரிவித்திருக்கிறது.
தங்களது திட்டத்தை நிறைவேற்றுவதற்காக 8 பக்கங்கள் கொண்ட ஆவணத்தை அந்த அமைப்பினர் தயார் செய்து வைத்திருந்ததையும் போலீஸார் கைப்பற்றி இருக்கிறார்கள்..
இந்த நிலையில்தான், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவுக்கு எதிரான புல்வாரி ஷெரீப் வழக்கு தொடர்பாக மோதிஹாரியின் டாக்கா பஜாரில் இருந்து அஸ்கர் அலி என்ற மௌலவியையும், அவருடன் தொடர்புடைய மேலும் இருவரையும் தேசிய புலனாய்வு அமைப்பினர் செவ்வாய்கிழமை கைது செய்திருக்கிறார்கள்.