சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு காஷ்மீரில் இருந்து பண்டிட்கள் யாரும் வெளியேறவில்லை – மத்திய அரசு தகவல்

0
148

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து மத்திய அரசு தங்கள் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. இந்நிலையில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த பின் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது.

கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்தியானந்த் ராய் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து 2019 ஆகஸ்ட் 5-ல் ரத்து செய்யப்பட்ட பின் காஷ்மீரில் இருந்து காஷ்மீரி பண்டிட்கள் யாரும் வெளியேறவில்லை.

சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் 128 பேர், பொதுமக்கள் 118 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் அரசின் பல்வேறு அரசுப்பணிகளில் 5 ஆயிரத்து 502 பண்டிட்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தாக்குதல்கள் வெகுவாக குறைந்துள்ளது. 2018-ம் ஆண்டு 417 ஆக இருந்த பயங்கரவாத தாக்குதல் 2021-ம் ஆண்டு 229 ஆக குறைந்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here