தமிழகத்தில் NIA குழுவினரால் கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு

0
132

ஈரோடு மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட் முனியப்பன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் நில புரோக்கர் மகபூப் மகன் ஆசிப் முசாப்தீன் 28; ஈரோடு பி.பெ.அக்ஹாரம் நஞ்சப்பா நகரைச் சேர்ந்த யாசின் 33 ஆகிய என்.ஐ.ஏ. குழுவினர் ஜூலை 26ம் தேதி மதியம் இருவரையும் கைது செய்தனர்.இருவரது வீடுகளில் இருந்த அலைபேசி, லேப்டாப், சிம் கார்டு, வங்கி பாஸ் புக், துண்டு பிரசுரம், டைரிகள், ஆவணங்கள், ஆதார் கார்டுகளை கைப்பற்றி ஆய்வுக்கு எடுத்து சென்றனர். விசாரணையில் ஆசிப் முசாப்தீனுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் ஆசிப் முசாப்தீன் மீது உள்நாட்டு பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளில் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.யாசினிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here