நாட்டின் சுதந்திர தினம், ஆக.,15ல் கொண்டாடப்படுகிறது. 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ‘வீடு தோறும் தேசியக் கொடி’ என்ற திட்டத்தின் கீழ், இம்மாதம், 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் சுதந்திர தின விழாவில் ஈடுபடுத்தவும், அனைவரின் வீடுகளிலும் தேசிய கொடியை பறக்கவிடவும், தமிழகத்தில் உள்ள ஒரு கோடி வீடுகளுக்கு, தமிழக பா.ஜ., சார்பில் தேசிய கொடிகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது என தகவல் .