உத்தரபிரதேச மாநிலம் மயன்புரி பகுதியில் உள்ள ஈசன் ஆற்றில் ராமர் பெயர் பொறிக்கப்பட்டுள்ள 5.7 கிலோ எடைமிதக்கும் கல் கண்டெடுக்கப்பட்டது.
மீன் பிடிக்க சென்ற சிறுவர்கள் ஆற்றில் கல் மிதந்து வந்ததைப் பார்த்து எடுத்துக் கொண்டு வந்து ஊரில் தந்துள்ளனர்
இந்த நிலையில் அந்த கல் எவ்வாறு தண்ணீரில் மிதக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது. கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி அந்த கிராமத்தைச் சேர்ந்த சில குழந்தைகள் ஆற்றில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.
அப்போது கருப்பு நிறத்தில் ஆற்றில் மிதந்து வரும் கல்லை கண்டுள்ளனர். அதை அவர்கள் கையில் எடுத்து கிராம மக்களிடம் கொண்டு வந்து காண்பித்துள்ளனர்.
இதை பார்த்த கிராம மக்கள்,
இந்த கல் இராமாயண காலத்தில் இலங்கைக்கு இராமர் பாலம் கட்ட பயன்படுத்தப்பட்டது என்று தெரிவித்தனர்.
ஜெய் ஸ்ரீராம்…