விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை தயாரித்துள்ள ‘ராயல் மின்ட்’ நிறுவனம்

0
231

பிரிட்டனைச் சேர்ந்த, ‘ராயல் மின்ட்’ நிறுவனம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஹிந்துக் கடவுள் விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை தயாரித்துள்ளது.ஐரோப்பாவில், பிரிட்டன் அரண்மனையைச் சேர்ந்த ராயல் மின்ட் நிறுவனம், கடந்த ஆண்டு தீபாவளிக்கு மகாலட்சுமி உருவத்துடன் தங்கக் கட்டியை வெளியிட்டது.31ம் தேதி கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை தயாரித்துள்ளது. 24 காரட் சுத்தமான தங்கத்தில் செய்யப்பட்ட இந்த தங்கக் கட்டியின் எடை 20 கிராம். இதன் விலை, 1 லட்சத்து 6,543 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேல்ஸ் பிராந்தியத்தின் ஸ்ரீ சுவாமிநாராயண் கோவிலைச் சேர்ந்த நிலேஷ் கபாரியா, விநாயகர் தங்கக் கட்டியை வடிவமைக்க உதவியுள்ளார். ‘விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகர் உருவத்துடன் தங்கக் கட்டியை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்’ என, ராயல் மின்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here