ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ- – திபெத் எல்லை காவல் படையின் வீராங்கனையர், -சீன எல்லை பகுதியில் இமயமலையில் கடல் மட்டத்தில் இருந்து 17 ஆயிரம் அடி உயரத்தில் தேசியக் கொடியை ஏற்றி நேற்று சாதனை படைத்தனர்.
நாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு, ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ என்ற பெயரில் நாடு முழுக்க கொண்டாடப்பட்டு வருகிறது.
வரும் 13 முதல் 15 வரை, ‘ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடி பறக்க விடப்பட வேண்டும்’ என்ற பிரசாரத்தை மத்தியஅரசு நடத்தி வருகிறது.