ஜம்மு – காஷ்மீரின் சர்வதேச எல்லைப் பகுதியில், ‘ட்ரோன்’கள் எனப்படும் ஆளில்லா விமானங்கள் வாயிலாக பாகிஸ்தான் ஆயுதங்களை வீசியது தொடர்பாக, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு, ஐந்து மாவட்டங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியது.
ஜம்மு, ஸ்ரீநகர், கதுவா, சம்பா மற்றும் தோடா மாவட்டங்களில் நேற்று எட்டு இடங்களில், என்.ஐ.ஏ., தேடுதல் வேட்டை நடத்தியது.
இதில், ட்ரோன்கள் வாயிலாக வீசப்பட்ட ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.’இந்த ஆயுதங்கள் சிறுபான்மையினர், புலம்பெயர்ந்தோர் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாத தாக்குதல்களை நடத்த, காஷ்மீரில் உள்ள லஷ்கர் – இ – தொய்பா பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்டன’ என, பாதுகாப்பு படையினர் தெரிவித்தனர்.