அமிர்தஸரஸ் :- சீக்கிய சமுதாயத்தை சேர்ந்த 12 குடும்பங்கள் தாய் மதம் திரும்பினர்.பேராசை காட்டி தங்களை மதமாற்றம் செய்ததாகவும் தெரிவித்தனர்.

0
423
அமிர்தஸர் மாவட்டத்தில் கோஹ்லெவால் என்ற கிராமத்தில் 12 சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த குடும்பங்கள் தாய்மதம் திரும்பின ர். சீக்கிய குருத்வாரா பிரபந்த கமிட்டி தில்லி (டி எஸ் ஜி எம் சி) அவர்களின் முயற்சியால் இந்த குடும்பங்கள் தாய் மதம் திரும்பின. சீக்கிய தர்ம பிரச்சார கமிட்டியின் தலைவர் மஞ்சித் சிங் போபா பேசுகையில் இந்த குடும்பங்களை சார்ந்தவர்கள் பேராசையூட்டி
மதமாற்றம் செய்யப்பட்டனர் என தெரிவித்தார்.
 
நோய்களிலிருந்து விடுதலை பெறவும் உரிய சிகிச்சைகள் செய்வதாகவும் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பதாகவும் இவர்களுக்கு சொல்லப்பட்டது. ஆனால் நடைமுறையில் இவை எதுவும் செய்யப்படவில்லை. சீக்கிய குருத்வாரா பிரபந்த கமிட்டி தில்லியைச் சார்ந்த தலைமை பொறுப்பாளர் ஹர்மீத் சிங் கால்கா ஆகஸ்ட் 3ஆம் தேதி இங்கே ஒரு அலுவலகம் திறந்து வைத்த பின் கிராமங்கள் தோறும் சென்று பிரச்சாரம் செய்து வரும வேளையில் தான் இந்த குடும்பங்களோடு சந்திப்பு நிகழ்ந்தது அதன் பிறகு அவர்கள் தங்கள் தாய் மதத்தை திருப்பி வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here