குவாலியர்: நாம் வாழ வெளியில் பல பொருட்களை பயன்படுத்துகிறோம். அத்துடன் நம்முடைய உள் மனதும் வளர்ச்சியடைய வேண்டும். அப்போது தான் முழு வளர்ச்சி ஏற்படும்.
நரனில் இருந்து நாராயணனாக மாறி பாரதீயர்களாகிய நாம் உலகத்திற்கு வழிகாட்ட முடியும் என்று ஆர் எஸ் எஸ் அகில பாரத செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ பையாஜி ஜோஷி கூறினார்.
தேசிய விழிப்புணர்வு பேரவையின் சார்பாக மூன்று நாட்கள் நடந்த ஞான விழிப்புணர்வு விளக்கவுரை நிறைவு நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
சிவாஜி பல்கலைக்கழகத்தின் அடல் பிகாரி வாஜ்பாய் ஆடிட்டோரியத்தில் நடந்த ஹிந்து தத்துவ ஆளுமை வளர்ச்சி என்ற தலைப்பில் விளக்க உரை ஆற்றினார். ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மத்திய பாரத மாநில தலைவர் திரு அசோக் பாண்டே அவர்கள் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். சிவாஜி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் அவனிஷ் திவாரி முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார். ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஆர்கே ஜெயின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
ஸ்ரீ பையாஜி ஜோஷி அவர்கள் பேசுகையில் சுவாமி விவேகானந்தரின் மேற்கோள்களை காட்டி சுவாமி விவேகானந்தர் பாரத நாட்டிற்கு வலுவான சிந்தனை கருத்துக்களை அடித்தளமாக தந்துள்ளார் என்றும் அந்த மாளிகையில் நாம் புனருத்தாரணம் செய்தல் வேண்டும் என்றும் தெரிவித்தார்.
பாரதத்தின் சிறந்த பரம்பரைகளும், மதிப்புகளும் நம்மை சிறப்பாக வாழ வைக்கின்றன. இப்பாதையில் நாம் சென்று பாரதத்தை மீண்டும் உலகத்தின் குருவாக உயர்த்த வேண்டும். பாரத நாட்டு கலாச்சாரமும் ஞானமும் தான் உலகம் முழுவதற்கும் நன்மையை அளிக்க முடியும். பாரதம் வஸுதேவ குடும்பகம் என்ற கருத்தை கொண்டிருக்கிறது. நாம் சக்தியை ஆராதிக்கிறோம் ஆனால் அந்த சக்தியை மனிதர்களின் உதவிக்கு பயன்படுத்த வேண்டும். நாம் சாஸ்திரங்களை படிக்கிறோம் என்றால் சாஸ்திரங்களின் பாதுகாப்பிற்காக சஸ்திரங்களையும் (ஆயுதங்களையும்) உபயோகப்படுத்துகிறோம்.
சிறப்பு விருந்தினர் துணைவேந்தர் அவர்கள் பேசுகையில் நாம் வெற்றி அடைய வேண்டுமானால் இலட்சியத்தை நிர்மாணித்துக் கொள்ள வேண்டும். மாணவருடைய மத்தியில் ஏற்படும் குழப்பத்தை தீர்க்க நாம் முறையான ஆலோசனைகள் வழங்க வேண்டும்.
பிராந்த சங்க சாலக் அசோக் பாண்டே அவர்கள் பேசுகையில் பாரத நாட்டு சிந்தனையே வஸுதேவ குடும்பகம் என்பது தான். சமுதாயத்தில் சமநீதி, ஈடுபாடு, மிகவும் தேவையான து. ஹிந்துத்துவ சிந்தனையின் அடிப்படையில் தான் உலகப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியும்.
நிகழ்ச்சியில் முன்னதாக விருந்தினர்களை தேசிய விழிப்புணர்வு பேரவையின் தலைவர் ஸ்ரீ ராஜேந்திர பாந்தில் மற்றும் செயலர் ஸ்ரீ அருண் அகர்வால் அனைவரையும் வரவேற்றார். ரிஷிகாந்த் திவேதி தனிப்பாடல் பாட நிகழ்ச்சியை ஸ்ரீ ரவீந்திர தீக்ஷித் தொகுத்து வழங்கினார். ஸ்ரீ அருண் அகர்வால் நன்றி உரை நிகழ்த்த நிகழ்ச்சி வந்தே மாதரம் பாடலுடன் நிறைவுற்றது.