புதுடில்லி: புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் அடுத்தடுத்து விஜயம் செய்ய உள்ளார். ஏற்கனவே அவர் ஓரிரு மாநிலங்களுக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில், தமிழகம் மீது மிகவும் பற்று கொண்டுள்ள ஜனாதிபதி நவம்பர் இறுதியில் இங்கு வரக்கூடும் என்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி மாளிகை, தமிழக அரசுடன் இணைந்து செய்து வருகிறதாம்.
ஜனாதிபதி முர்மு மதுரை மீனாட்சி அம்மன் மீது பக்தி கொண்டவர்.