இந்தியா வருகிறார் ஐ.நா. பொதுச்செயலர்

0
260

நியூயார்க்: ஐ.நா. பொதுச்செயலர் ஆண்டனியோ குட்டரெஸ், அரசு முறைப்பயணமாக நாளை (அக்.18-ம் தேதி ) இந்தியா வருகிறார்.

போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமராக இருந்த இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. பொதுச்செயலராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் மூன்று நாள் அரசுமுறைப்பயணமாக அக். 18-ம் தேதி இந்தியா வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள ஆண்டனியோ குட்டரெஸ் இந்தியா வருவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here