டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம், கேதர்நாத் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி பூஜை செய்து வழிபாடு நடத்தினார். புரோகிதர் மந்திரம் கூற தொடர்ந்து பிரதமர் மோடி சிவனை வழிப்பட்டார். சிறப்புபூஜையும் நடத்தினார் கோயிலுக்கு பாரம்பரிய பகடி ஆடையையும் வழங்கினார்.
கோயிலுக்கு வந்த மோடி, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் பாரம்பரிய உடையான ‘சோழா டோரா’ அணிந்திருந்தார். மோடி, இதற்கு முன்னர் ஹிமாச்சல பிரதேசத்திற்கு வந்த போது, சம்பா மாவட்டத்தை சேர்ந்த பெண் பரிசாக வழங்கியதாக தெரிகிறது.கேதர்நாத் கோயிலுக்கு மோடியுடன் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தமி உடன் வந்தார்.
கேதர்நாத் ரோப்கார் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய மோடி, தொடர்ந்து, ஆதிகுரு சங்கராச்சாரியார் சமாதிக்கும் சென்றார். தொடர்ந்து, கோயில் பகுதியில் நடக்கும் வளர்ச்சி பணிகளையும் ஆய்வு செய்தார். இங்கு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு பத்ரிநாத் செல்லும் மோடி, அங்கு வழிபாடு நடத்துவதுடன் பூஜை செய்ய உள்ளார். அங்குள்ள நதிக்கரையில் நடக்கும் வளர்ச்சி பணிகளை ஆய்வு செயது, மணா கிராமத்தில் சாலை மற்றும் ரோப்வே திட்டத்திற்கும் அடிக்கல் நாட்ட உள்ளார்.