புது தில்லி, நவ.7 அழ. வள்ளியப்பாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினார். பிரபல தமிழ் எழுத்தாளரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, குழந்தைகளுக்கான இலக்கியப் படைப்புகளுக்காக சிறப்புரையாற்றினார்.
அவரது முயற்சிகள் இன்றைய காலகட்டத்தில் பலருக்கு ஊக்கமளிப்பதாகத் தொடர்கிறது என்றார் மோடி.
பிரதமர் தனது ட்விட்டர் பதிவில், “திரு அழ.வள்ளியப்பாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது சிறந்த எழுத்து மற்றும் கவிதைகளுக்காக மட்டும் நினைவுகூரப்படாமல், குழந்தைகளிடையே வரலாறு, கலாச்சாரம் மற்றும் இலக்கியத்தை பிரபலப்படுத்த அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் நினைவுகூரப்படுகிறார். அவரது முயற்சிகள் இன்றைய காலகட்டத்தில் பலருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது.” என்று பதிவிட்டுள்ளார்.