கோயில் நிர்வாகம் நடவடிக்கை

0
444

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பேலூரில் உள்ள 12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சென்னகேசவா கோயிலின் நிர்வாகக் குழு, கோயில் வளாகத்தில் கடை நடத்தி வந்த ஒரு முஸ்லீம் விற்பனையாளருக்கு வெளியேற்ற நோட்டீஸை வழங்கியுள்ளது. கோயில் நிர்வாகி வித்யாலதா இது குறித்து கூறுகையில், ”ஹிந்து சமய நிறுவனங்கள் மற்றும் அறநிலையத்துறை சட்டம், 2002ன் கீழ், கோயில் வளாகத்தில் உள்ள இடங்களை, ஹிந்துக்கள் அல்லாதவர்களுக்கு குத்தகைக்கு விடவோ, வாடகைக்கு விடவோ முடியாது. ஹிந்து மத நிறுவனங்களின் வளாகத்திலும் அதைச் சுற்றியும் ஹிந்துக்கள் அல்லாதவர்கள் வணிகம் செய்ய முடியாது. என்பதால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விற்பனையாளரின் பதிலை அறநிலையத்துறை கமிஷனருக்கு அனுப்பியுள்ளேன்” என தெரிவித்தார். கர்நாடகாவில் உள்ள பல கோயில்கள் ஹிந்துக்கள் அல்லாதவர்களை தங்கள் வளாகங்களில் அனுமதிக்கக் கூடாது என முடிவு செய்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here