கோவை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ சோதனை

0
247

சென்னை: நவ,10 . கோவை, சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை இன்று (வியாழன்) அதிகாலை 4.20 மணி முதலே நடந்து வருகிறது. சென்னையில் மன்னடி, ஜமாலியா, புதுப்பேட்டை, பெரம்பூர் உள்ளிட்ட 5 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடந்து வருகிறது. கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த முபினுடன் தொடர்புடையவர்கள், தடை செய்யப்பட்ட இயக்கங்களின் ஆதரவாளர்கள் என சந்தேகப்படுபவர்கள் வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. திருப்பூரில் ஜமேஷா முபினின் தங்கை கணவர் வீடு, மயிலாடுதுறையில் ஒருவர் வீடு என பல இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here