தென்காசி நவ.23. தென்காசி மாவட்டம் சுரண்டையில் நேற்று மாலை 8 மணிக்கு சமுதாய நல்லிணக்க பேரவை மற்றும் அறநெறி வாசகர் வட்டம் இணைந்து பாரதியின் 140 வது பிறந்தநாள் விழா கருத்தரங்கத்தை நடத்தியது.
இந்த விழாவானது சமுதாய நல்லிணக்க பேரவையின் மாவட்ட தலைவர் ஸ்ரீ வரதராஜன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. மேற்படி நிகழ்ச்சிக்கு திரு வரதராஜன் அவர்கள் தலைமை தாங்கினார்கள். தலைமை உரையில் இந்த இல்லம் அறநெறி கருத்துக்களுக்காகவும் சமுதாய நல்லிணக்கத்திற்காகவும் அர்ப்பணிக்கப்பட்ட இல்லமாக விளங்கும் என்று குறிப்பிட்டார்.
அடுத்ததாக “பாரதியின் பார்வையில் விடுதலை” என்ற தலைப்பில் சமுதாய நல்லிணக்க பேரவையின் மாநில அமைப்பாளர் ஸ்ரீ ராஜ முருகானந்தம் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள். அவர் தனது உரையில் பாரதியார் இந்த தேசத்தின் விடுதலைக்காக பாடியதோடு அல்லாமல் ஜாதிய விடுதலை, ஏழை-பணக்காரன் விடுதலை, பெண் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை போன்றவற்றையும் பாடியுள்ளார் என்று குறிப்பிட்டு அது பற்றி விரிவாக பேசினார்கள்.
நிறைவாக ஆர்.எஸ்.எஸ்-ன் மண்டல உடற்பயிற்சி துறை பொறுப்பாளர ஆ. பழனி முருகன் அறநெறி தழைத்து மக்களிடையே அன்பு பெருக வேண்டும் இதற்கான வேலையை தான் சமுதாய நல்லிணக்க பேரவை செய்து கொண்டிருக்கிறது மேலும் அதிகமான கிராமங்களுக்கு இது செல்ல வேண்டும் என்று கூறினார் நிறைவாக இந்த மாவட்டத்தில் அதிகமான இடத்தில் பாரதியின் பிறந்தநாள் விழாவினை நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.