முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ‘அகில பாரதிய பூர்வ சைனிக் சேவா பரிஷத் அமைப்பின் 23வது ஆண்டு செயற்குழு கூட்டம், அதன் தேசிய தலைவர், லெப்டினன்ட் ஜெனரல் விஷ்ணு காந்த் சதுர்வேதி தலைமையில், ஒரிசா மாநிலம் பூரி ‘மாவட்டத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக ஒரிசா மாநில ஆளுநர் கணேஷி லால் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூவல் ஓரம் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகம் சார்பாக, அந்த அமைப்பின் மாநில தலைவர் கிள்ளியூர் விஜயகுமார், துணை தலைவர் ராதாகிருஷ்ணன், சுபேதார் பாலன், ஸ்ரீ’ரீ கண்டன் நாயர் ஆகியோர் கலந்து கொண்டனர்.