அசாம் மாநிலம் கௌஹாத்தியில் உள்ள சந்திராபூர் வட்டாரத்தில் உள்ள சந்திரபூர் வித்யா பாரதி பள்ளியில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பிரேரண ஷிவிரின் நிறைவு நாளில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத், “தேசத்தின் நலனுக்காக எல்லாவற்றையும் செய்ய நாம் தயாராக இருக்க வேண்டும். டாக்டர்.கேசவ் பலிராம் ஹெட்கேவார், 1925ல் மனித வளத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நிறுவினார்.டாக்டர் ஹெட்கேவார், நமது பெரிய நாட்டின் மக்கள் உண்மையான சுதந்திரத்தை அடைய சமூகத்தை வலுப்படுத்த உழைக்கத் தொடங்கினார்.ஒரு பலவீனமான சமூகம் அரசியல் சுதந்திரத்தின் பலனை ஒருபோதும் அனுபவிக்க முடியாது.கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் ஆனால் அது நம் மனங்களில் இல்லை.ஆர்.எஸ்.எஸ் தனது நூறு ஆண்டுகால இருப்பை நிறைவு செய்துவருகிறது.ஒவ்வொரு ஆண்டும் அது புதிய இளம் ரத்தங்களை ஈர்த்து வருகிறது.ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இப்போது ஆறாவது தலைமுறையை சேர்ந்தவர்கள் தேசத்திற்காக உழைக்க முன்வந்துள்ளனர்.ஸ்வயம்சேவகர்கள் தேசத்தின் நலனுக்காக தன்னலமின்றி உழைக்கும்போது நல்ல குணங்களைப் பேணுகிறார்கள்.ஸ்வயம்சேவகர்களின் செயற்பாடுகளை மக்கள் அமைதியாக கவனித்துக்கொண்டு வருகிறார்கள்.அவர்களுக்காக தங்களது நேரத்தையும் சக்தியையும் ஸ்வயம்சேவகர்கள் அர்ப்பணிக்க வேண்டும்.பாரதத்தில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு ஷாகா இருக்க வேண்டும், ஏனெனில் ஒட்டுமொத்த சமூகமும் அவர்களுக்காக பணியாற்றுவதற்கான வாய்ப்பை நமக்கு வழங்கியுள்ளது.எனவே ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர்கள் சமூகத்தை முன்னோக்கி வழிநடத்த வேண்டும்.பாரதத்தின் பெருமை மற்றும் பாரம்பரியத்தின் மீது முழு நம்பிக்கையுடன், ஸ்வயம்சேவகர்கள் தேசத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும்” என கூறினார். ஹஜோங்பாரியில் டிசம்பர் 9 முதல் 11 வரையிலான இந்த 3 நாட்கள் ஷிவிரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வடக்கு அசாம் பகுதியை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் மற்றும் காரியகர்த்தர்க்கள் கலந்து கொண்டனர். இதேபோல மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் போபால் கோட்டம் சார்பில் நடந்த மாபெரும் ஷாரீரிக் (உடற்பயிற்சி) நிகழ்ச்சியில், 2,500 ஸ்வயம்சேவகர்கள் பங்கேற்று பலவிதமான உடற்பயிற்சிகள், சங்க கோஷ் (இசை) நிகழ்ச்சிகளை நடத்திக் காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசிய பொதுச் செயலாலர்.தத்தாத்ரேய ஹொசபாலே பங்கேற்று சிறப்புரையாற்றினார்.