பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் ஜூவல் ஓரம் தலைமையிலான பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, மூன்றாவது விமானந்தாங்கி கப்பலுக்கு பரிந்துரை செய்துள்ளது. கடந்த டிசம்பர் 23LD தேதி முடிவுற்ற குளிர்கால கூட்டத்தின் போது இதற்கான பரிந்துரையை இந்த குழு மத்திய அரசுக்கு அளித்துள்ளது. அந்த அறிக்கையில் மத்திய அரசுக்கு இந்திய கடற்படைக்கு மூன்று விமானந்தாங்கி கப்பல்கள் தேவை எனவும் கடல்களில் உள்ள தீவுகள் இத்தகைய பலத்தை தராது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், மூன்று விமானந்தாங்கி கப்பல்கள் இருக்கும் பட்சத்தில் எப்போதும் இரண்டு விமானந்தாங்கி கப்பல்கள் செயல்பாட்டில் இருக்கும் ஆகவே உடனடியாக இதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என குழுவால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.