101வது மனதின் குரல்

0
69

101வது மனதின் குரல் (மன் கி பாத்) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சி அதன் இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தை குறிக்கிறது. கடந்த மாதம் நாடு முழுவதும் ஒன்று கூடினர். இது ஒளிபரப்பப்பட்டபோது உலகம் முழுவதிலுமிருந்து ஏராளமான மக்கள் வெவ்வேறு நேரத்தில் இருந்தாலும் அதை கேட்டனர் என்றார். வீர் சாவர்க்கரின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில், “மாபெரும் சுதந்திர போராட்ட வீரர் வீர் சாவர்க்கரின் பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்துகிறேன். அவரது தியாகம், தைரியம், உறுதிப்பாடு இன்றும் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது.வீர் சாவர்க்கரின் ஆளுமை வலிமை மற்றும் பெருந்தன்மை கொண்டது.அவரது அச்சமற்ற சுய மரியாதை குணத்தால் அடிமை மனப்பான்மையை சகித்து கொள்ள முடியவில்லை.சுதந்திர இயக்கத்தில் மட்டுமல்ல, சமூக சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக வீர் சாவர்க்கர் என்னென்ன செய்தார் என்று இன்று நினைவு கூறப்படுகிறது” என்று கூறினார்.‘யுவ சங்கம்’ முயற்சியில் பங்கேற்றவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கும், மக்களுடன் மக்கள் தொடர்பு கொள்வதற்கும் கல்வி அமைச்சகத்தின் இளைஞர் பரிமாற்ற திட்டமான யுவ சங்கம், ஒரு சிறந்த முயற்சி ஆகும். இந்த திட்டம் நாட்டின் ஒரு பகுதியை சேர்ந்த மாணவர்கள் மற்ற பகுதிகளுக்கு சென்று அங்குள்ள கலாச்சாரம், பாரம்பரியத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்பு வழங்குகிறது.இந்த முன்முயற்சியின் நோக்கம் மக்களிடையேயான தொடர்பை ஊக்குவிப்பதாகும். 22 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு, அந்த நினைவுகள் அவர்களின் இதயங்களில் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக இருக்கும். பாரதத்தின் பன்முகத்தன்மையே அதன் பலம் என தெரிவித்தார்.குருகிராமில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் 1860ம் ஆண்டுக்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்த 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார். அதேபோன்று, தமிழ்நாட்டில் உள்ள அரசு அருங்காட்சியகம் மாற்றுத்திறனாளிகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.மேலும், 75 மாவட்டங்களில் தண்ணீரை சேமிக்கும் வகையில் மத்திய அரசின் நீர்நிலைகளை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.அருங்காட்சியகங்கள் குறித்து பேசிய பிரதமர், “சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் சர்வதேச அருங்காட்சியக கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.பாரதத்தில் நமது கடந்த காலத்தை வெளிப்படுத்தும் பல அருங்காட்சியகங்கள் உள்ளன.குருகிராமில் மியூசியோ கேமரா என்ற தனித்துவமான அருங்காட்சியம் உள்ளது.1860ம் ஆண்டுக்கு முந்தைய 8 ஆயிரம் கேமராக்களின் தொகுப்பு உள்ளது.தமிழகத்தில் உள்ள அருங்காட்சியம் தெய்வீகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் அருங்காட்சியகம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை கொண்டு உள்ளது.சுதந்திர போராட்டத்தில் பழங்குடியினர் பங்களிப்பை நினைவுகூறும் வகையில் 10 புதிய அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டு வருகின்றன” என குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here