வீர் கார்டியன் 2023 என்ற போர் விமானப் பயிற்சி ஜப்பானில் ஜனவரி 16 முதல் ஜனவரி 26 வரை ஓமிடாமாவில் உள்ள ஹயகுரி விமான தளம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வான்வெளியிலும், ‘சயாமாவில் உள்ள இருமா விமான தளத்திலும் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள இந்திய விமானப்படை சார்பில், முதல்முறையாக, ஸ்குவாட்ரான் லீடர் அவ்னி சதுர்வேதி தலைமையில் மூன்று பெண் போர் விமானிகள் பங்கேற்க உள்ளனர். இதற்காக அவர்கள் எஸ்.யு 30 எம்.கே.ஐ போர் விமானத்துடன் விரைவில் ஜப்பான் செல்ல உள்ளனர். இதில் இரண்டு பெண் போர் விமானிகள் ஏற்கனவே நமது நாட்டிற்கு வந்த பிரெஞ்சு விமானப்படை உட்பட சில வெளிநாட்டு விமானப் படைகளுடன் போர் பயிற்சிகளில் பங்கேற்றுள்ளனர். ஆனால், அவர்கள் வெளிநாட்டு மண்ணில் (வானில்) நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவது இதுவே முதல் முறை என்பது சிறப்பு. இதில் பங்கு பெறும் மற்றொரு பெண் போர் விமானியான ஸ்குவாட்ரன் லீடர் பாவ்னா காந்த், தாங்கள் இந்த போர் பயிற்சிக்காக பயன்படுத்தவுள்ள எஸ்.யு 30 எம்.கே.ஐ போர் விமானத்தின் சிறப்புகள் குறித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் எடுத்துரைத்தார்.