கோயில் பணம் கோயிலுக்கே

0
205

சென்னை உயர் நீதிமன்றத்தில் ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனுவில், அறநிலையத்துறை அலுவலகங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவும், முந்தைய ஆட்சியில் அமைச்சருக்கு வாகனங்கள் வாங்குவதற்கும், கணினிமயமாக்கவும், மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டவும் கோயில் நிதி பயன்படுத்தப்பட்டது. கோயில்களை நிர்வகிப்பதற்காக, மொத்த வருமானத்தில் 12 சதவீதம் வழங்கப்படுகிறது என புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அறநிலையத்துறைக்கு தேவையான செலவுகளை கோயில்களின் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என்று கூறி வழக்கின் அடுத்த விசாரணையை பிப்ரவரி 8ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here