பா.வே.மாணிக்கநாயக்கர்

0
177

1. சேலம் மாவட்டம் பாகல்பட்டியில் பிப்ரவரி 2, 1871 ஆம் ஆண்டு பிறந்தவர். பள்ளியில் படிக்கும்போதே கவிபாடும் ஆற்றல் கொண்டிருந்தார். தமிழில் அதிக புலமையும், ஆர்வமும் கொண்டவர்.
2. சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் மாநிலத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்று 4 பவுன் தங்கப் பதக்கத்தை பரிசாகப் பெற்றார்.
3. பொதுப்பணித் துறையில் கட்டுமானப் பொறியாளராக 1896-ல் சேர்ந்தார். திருச்சியில் பணியாற்றியபோது, ஞாயிறுதோறும் புலவர்களை வரவழைத்து இலக்கிய உரையாடல் நிகழ்த்துவார். 1919-ல் கூட்டப்பட்ட புலவர்கள் மாநாட்டில், தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உலகின் அனைத்து மொழிகளில் உள்ள சொற்களையும் எழுத முடியும் என்று நிரூபித்தார்.
4. தமிழுக்கென தனி பல்கலைக்கழகம் உருவாக வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியவர். பல நூல்களை எழுதியுள்ளார். தமிழ் வேர்ச்சொற்களில் இருந்து பல அறிவியல் சொற்களை உருவாக்கிப் பயன்படுத்தினார். மறைமலையடிகளால் ‘தனித்திறமார் பேரறிஞர்’ என்று பாராட்டு பெற்றவர்.
5. பல ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதினார். ‘தமிழ் உச்சரிப்பு’ என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் ஏராளமான சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். தமிழின் சிறப்பை ஆங்கிலேயர் அறியவேண்டும் என்பதற்காக பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே உரையாற்றுவார்.
6. ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கிலும் புலமை பெற்றவர். தையல், தச்சு, ஓவியம், இசையிலும் பயிற்சி பெற்றிருந்ததால், பலரும் இவரை ‘பல்கலைக்கழகம்’ என்றனர்.
7. பொறியியல் துறையில் 60-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். விலங்கியல், வானியல், நிலவியல் துறைகளிலும் ஆர்வம் கொண்டிருந்தார். கான்க்ரீட் பற்றி ஆய்வு மேற்கொண்டார். மேட்டூர் அணைக்கான வரைமுறையை அமைத்தார்.
8. அறிவியல் சிந்தனையாளர், கணக்கியல் முறைகளைக் கண்டறிந்தவர், ஒலி நூலாராய்ச்சியில் ஈடு இணையற்றவர் என்றெல்லாம் போற்றப்பட்ட பா.வே.மாணிக்க நாயக்கர், ஜோதிடக் கலையிலும் வல்லவர். தனது ஆயுட்காலம் 60 ஆண்டுகள் என்று கணித்து வைத்திருந்தார். 60-வது வயதில் (1931) மறைந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here