வெள்ளலூர் அண்ணாச்சாமி சுந்தரம்

0
225

1. வெள்ளலூர் அண்ணாச்சாமி சுந்தரம் பிப்ரவரி 2, 1896 ஆம் ஆண்டு பிறந்தார். இந்திய விடுதலை இயக்கத்தின் போது மகாத்மா காந்தியுடன் துணை நின்றவர். மதன் மோகன் மாளவியாவின் நம்பிக்கையை பெற்றவர். பனாரஸ் இந்து பல்கலைக்கழத்தின் செயலராக இருந்தவர்.
2. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயிலும் போது மகாத்மா காந்தியின்பால் ஈர்க்கப்பட்ட சுந்தரம், கல்வியை இடையில் நிறுத்தி விட்டு டிசம்பர்,1914 – ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து இந்திய விடுதலை இயக்கத்தில் நேரடியாக பங்கெடுத்தார்.
3. 1917 – ல் வங்காளப் பிரிவினைக்கு எதிரான போராட்டத்திலும், 1925 – ல் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்திலும் மற்றும் 1930 & 1931 ஆம் ஆண்டுகளில் ஒத்துழையாமை இயக்கங்களில் கலந்து கொண்டு பல முறை சிறை சென்றவர் வெள்ளலூர் அண்ணாச்சாமி சுந்தரம்.
4. மகாத்மா காந்தி லண்டன் நகர வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன், இந்திய விடுதலை இயக்க செய்திகளை ஐரோப்பிய நாடுகளில் பரப்ப 1931 ஆம் ஆண்டில் ஏழு மாதம் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு காந்தியின் இந்திய விடுதலை இயக்கச் செய்திகளை அந்நாட்டு தலைவர்களிடம் விவரித்து, இறுதியாக லண்டன் வட்ட மேசை மாநாட்டிற்கு காந்திக்கு உதவியாக இருந்தார்.
5. 1916 ஆம் ஆண்டில் மதன் மோகன் மாளவியா, வாரணாசியில் ஒரு புதிய பல்கலைகழகம் நிறுவ மேற்கொண்ட முயற்சியில், சுந்தரம் அவர்கள் மாளவியாவின் நேர்முக உதவியாளராகவும், பல்கலைக்கழக கட்டிட நன்கொடை வசூலிக்கும் குழுவின் செயலராகவும் இருந்து நாடு
முழுவதுமிருந்து நன்கொடைகள் வசூலித்துக் கொடுத்தார்.
6. 1926 – ல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் துவங்கிய பின், அதன் செயலராக 1956 ஆம் ஆண்டு வரை முப்பது ஆண்டுகள் பணிந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here