பாரதத்தின் ‘தபஸ்’ (TAPAS) கண்காணிப்பு டுரோன் அடுத்த வாரம் பெங்களூரில் உள்ள ஏரோ இந்தியா 2023ல் காட்சிப்படுத்தப்படும் என்று பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ) தெரிவித்துள்ளது. டி.ஆர்.டி.ஓ தயாரித்துள்ள இந்த டுரோன், ஒரு நடுத்தர உயர நீண்டதூர ஆளில்லா வான்வழி வாகனமாகும், 28,000 அடி உயரத்தில், 18 மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் திறன் கொண்டது. பகல், இரவு நேரங்களிலும் செயல்படும் திறன் கொண்டது, தொலைவிலிருந்து இதனை கட்டுப்படுத்தலாம் அல்லது தன்னாட்சி முறையில் பறக்க வைக்கலாம். உயர் தெளிவுத்திறன் படங்கள் மற்றும் வீடியோக்களைப் படம்பிடித்து தரைக் கட்டுப்பாட்டு நிலையத்திற்கு அனுப்பும் வகையிலான கேமராக்கள், நவீன சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளது.