உலகத்தினரை ஈர்க்கும் ஹிந்து தர்மம்

0
132

மயிலாடுதுறை மாவட்டம்‌, சீர்காழி தாலுக்கா, வைத்தீஸ்வரன்‌ கோயிலுக்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த 40 பேர் வந்திருந்தனர். பாலகும்ப குரு மணிகள்‌ தலைமையில் அவர்கள்‌ சிறப்பு ஹோமங்கள் செய்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்‌. இவர்கள்‌ தமிழகம்‌ முழுவதும்‌ ஆன்மீக சுற்றுப்பயணம்‌ செய்து, நமது கலாச்சாரம்‌, பண்பாடு, ஆன்மீகம்‌ மற்றும்‌ சித்தர்‌ வழிபாட்டு முறை ஆகியவற்றை உணர்ந்து அவற்றை பின்பற்றுவதுடன்‌, சிவன்‌,முருகன்‌ மற்றும்‌ நவகிரகத் தலங்களில்‌ சிறப்பு ஹோமங்கள்‌ செய்து வழிபாடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில்‌ இருக்கும்‌ சிலர்‌ ஹோமங்கள்‌, சடங்குகளை கேலி செய்து, இழிவுபடுத்தும்‌ வகையில் நடந்துகொள்கின்றனர். ஆனால், ஹிந்து தர்மத்தின்‌ கலாச்சாரம்‌, ஆன்மீக சடங்கு சம்பிரதாயங்களில்‌ ஈர்க்கப்பட்டு உலக நாட்டினர் பலர் நமது‌ தர்மத்தை நோக்கி வந்து கொண்டுள்ளனர். இங்குள்ளவர்கள் இவர்களை பார்த்து பாடம்‌ கற்றுக்‌கொள்ள வேண்டும்‌.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here