தேவிகுளம் எம்.எல்.ஏ. தகுதி ரத்து

0
155

பட்டியல் இனத்தவர் என்று பொய் சான்றிதழ் கொடுத்து இடுக்கி மாவட்டம் தேவிகுளம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.பி.எம். சட்டமன்ற வேட்பாளர் அ.ராஜாவை தகுதி இழப்பு செய்தது கேரள உயர் நீதிமன்றம்.
காங்கிரஸ் வேட்பாளர் டி.குமாரை 7,847 வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் டி குமார் இவரது வெற்றியை எதிர்த்து கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து குற்றச்சாட்டை தக்க ஆதாரங்களைக் கொண்டு நிரூபித்துள்ளார்.
அந்தோனி – எஸ்தர் தம்பதிக்குப் பிறந்த ஏ.ராஜா பிறவிக் கிறிஸ்துவர். மனைவி ஷினிப்ரியாவும் கிறிஸ்துவர். சர்ச்சில் கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின் போது அணிவித்த நெக் லெஸ்ஸில் சிலுவைக் குறி இருககும் புகைப்படத்தையும் நீதி மன்றத்தில் டி.குமார் ஆதாரமாக தாக்கல் செய்துள்ளார்.
ஆதாரங்களை ஏற்ற கேரள உயர் நீதிமன் றம் ஹிந்து பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட ஏ.ராஜா விற்கு தகுதியில்லை எனக் கூறி அவரது சட்டமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்துள்ளது.
இத்தீர்பபை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது.
தேவிகுளம் தொகுதியில் 62% வாக்காளர் கள் தமிழர்கள். பட்டியல் இனத்தவர்களான பள்ளர்கள் & பறையர்கள் அதிகமாக உள்ளனர்.
நாடெங்கிலும் மதம் மாறிய பலர் போலி சான்றிதழ் கொடுத்து ஹிந்து பட்டியல் இனத்தவர்களுக்கு உரிய உரிமையைப் பறித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here