பெங்களூரு எச்.ஏ.எல்., தொடக்கநெகுந்தி ஏரி அமைந்துள்ளது10 நாட்களுக்கு முன் துார்வாரப்பட்டது. அப்போது, சுவாமிகள் உருவங்கள் கொண்ட செதுக்கப்பட்ட ஒரு கல் கிடைத்தது. கர்நாடகா அரசின் மொழிபெயர்ப்பு இயக்குனரக உதவி இயக்குனர் ஸ்மிதாரெட்டி கூறியது: இது கங்கர்கள் காலத்து 11ம் நுாற்றாண்டின் வீரக்கல் என்பது உறுதி செய்யப்பட்டது. வீரக்கல்லில், மூன்று படிகளில் சுவாமிகள் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. முதல் படியில் வாத்யங்களுடன் வந்து, அக்னி கூடத்தில் சதி அமர்ந்துள்ளார். அருகில் குதிரை சிற்பம் உள்ளது. இரண்டாம் படியில், வீரன் மற்றும் அவரது மனைவியின் உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மூன்றாம் படியில், வலது மற்றும் இடது புறத்தில் வீரன் மற்றும் சதியை சொர்க்கத்துக்கு அழைத்து செல்வது போன்று தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளன. மனைவியை போற்றக்கூடிய இத்தகைய வீரக்கற்கள் பெங்களூரு நகரில் கிடைப்பது இதுவே முதன் முறை.