பாரத தயாரிப்பு பீரங்கிகளை வாங்கும் சௌதி

0
124

சௌதி அரேபியா அரசின் ராயல் சௌதி ராணுவம், பாரத் 52 (155 மி.மீ, 52 கலிபர் இழுத்துச் செல்லப்படும் வகையிலான பீரங்கிகள் மற்றும் கருடா வி2, 105 மி.மீ ஆர்டில்லரி பீரங்கிகளை சோதனை செய்தது. சோதனைகள் திருப்திகரமாக இருந்ததையடுத்து சௌதி ராணுவம், இந்த வகையான ராணுவத் தளவாடங்களை பாரதத்திடம் வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சௌதி இராணுவம் தற்போது ஜிசி 45 பீரங்கிகளை உபயோகித்து வருகிறது. இந்த 155மி.மீ ஆர்டில்லரிகளை ஜெரால்ட் புல் நிறுவனம் மேம்படுத்தியது. இந்த நிறுவனத்தை தற்போது பாரதத்தை சேர்ந்த ராணுவ ஆயுத தயாரிப்பாளரான கல்யாணி குழுமம் கையகப்படுத்தியுள்ளது. இந்த பாரத் 52 என்பது ஜிசி 45 ஆர்டில்லரியின் நவீனப்படுத்தப்பட்ட வகை ஆகும். சௌதி ராணுவம் இந்த பாரத் 52 ஆர்டில்லரியை வாங்க ஆர்வம் தெரிவித்த பிறகு ஆர்டில்லரிகளை சோதனை செய்ததாகவும் தற்போது 70 முதல் 80 ஆர்டில்லரிகள் வரை வாங்க ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், இந்த வகை பீரங்கிகளை பல்வேறு தென்கிழக்காசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் கல்யாணி குழுமம் முயற்சி செய்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here