பெங்களூரு தாணிசந்த்ரா ராஷ்ட்ரோத் தான வித்யா கேந்திரம் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகளுக்காக 5 நாள் கோடை கால முகாம் நடத்தி வருகிறது. அதில் நேற்று “‘மாத்ரு போஜனா ” நிகழ்ச்சி எற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 20 தாய்மார்கள் தத்தமது வீடுகளில் தயாரித்த அறுசுவை உணவுகளை எடுத்து வந்து முகாமில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கும் மற்றவர்களுக்கும் பரிமாறினார். சமுதாயத்தில் நல்லுணர்வு, நம்பிக்கை, ஒற்றுமை ஏற்பட இம்மாதிரி நிகழ்ச்சிகள் பெரிதும் உதவிகரமாக இருந்து வருகிறது.சங்க முகாம்களில் இது நடைமுறையில் உள்ளது. சங்க ஸ்வயம் சேவகர்களால் நடத்தப்பட்டு வருகிற ஒரு தொண்டு அமைப்பு ராஷ்ட்ரோத்தான பரிஷத். பல்வேறு சமூகநலத் தொண்டுப் பணி களை இவ்வமைப்பு பல ஆண்டுகளாக தொடர்ந்து செய்து வருகிறது.