செங்கல்பட்டு ஸ்ரீ.கே.சு.ஜெ. விவேகானந்தா வித்யாலயாவில் கல்வி பண்பாட்டு மைய 3ம் ஆண்டு விழா

0
104

செங்கல்பட்டு 16.04.2023 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. பள்ளியின் மூலமாக நடக்கின்ற 27 கல்வி பண்பாட்டு மையங்களில் இருந்து 215 மாணவ,மாணவிகள், 27 ஆசிரியர்கள், மற்றும் 15 பெற்றோர்களும் இந்த ஆண்டு விழாவிலே காலை முதல் மாலை வரையில் பல நிகழ்ச்சியில் மிகவும் உற்சாகமாக கலந்து கொண்டார்கள். பேச்சு போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல், பாடல் போட்டி, நடன போட்டி, விளையாட்டு போட்டி மற்றும் கல்வி பண்பாட்டு மைய ஆசிரியர்கள், மற்றும் பெற்றோர்களுக்கும் விளையாட்டு போட்டி வைக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாலை 3 மணி அளவில், கல்வி பண்பாட்டு மைய மாணவ மாணவிகளை கொண்டு கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டன . இதில் மாணவ மாணவிகள் மிகவும் உற்சாகத்தோடு கலந்து கொண்டு, வாய்ப்பு கிடைத்தால் எங்களாலும் சாதிக்க முடியும் என்பதற்கேற்ப தங்களுடைய திறமைகளை அங்கே வெளிப்படுத்தினார்கள்.அரசாங்க பள்ளியிலே படிக்கின்ற, இருளர் சமுதாயம், பட்டியிலனச் சமுதாய மாணவர்கள் செய்து காட்டிய கலை நிகழ்ச்சிகள், அங்கே வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் ஆச்சிரியம் ஏற்படுத்தியதோடு மட்டும் அல்லாமல் மிகவும் பாராட்டவும் செய்தார்கள்.
இந்த நிகழ்ச்சியில் வித்யா பாரதி மாநில பொறுப்பாளர் U. சுந்தர்ஜி அவர்களின் வாழ்த்துரையோடு, நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here