ராமநாதபுரத்தில், சர்வதேச தினை ஆண்டு குறித்து எட்டிவயலில் இயற்கை விவசாயிகளிடம் கவர்னர் ரவி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: விவசாயிகள் இந்தியாவின் முதுகெலும்பு. விவசாயமே முதன்மையானது. இயற்கை விவசாயத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இயற்கை விவசாயம் என்பது விவசாயிகள் அந்தந்த மண்வளம் மற்றும் வானிலைக்கு ஏற்ற பயிர்களில் கவனம் செலுத்துவதாகும். பிரதமர் மோடியின் முயற்சியின் காரணமாக, இந்த சர்வதேச தினை ஆண்டில் தினையின் முக்கியத்துவம் முன்னுரிமை பெற்றுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.