குவஹாத்தி அருகிலுள்ள அயோ என்ற சிற்றூரில் சோனாராம், அலேகி என்ற பெற்றோருக்கு வறுமை மிகுந்த விவசாயக் குடும்பத்தில் ஏப்ரல் 24, 1888 இல் பிறந்தார். குவகாத்தியில் உள்ள பள்ளியில் தமது படிப்பை 1905இல் முடித்தார். பள்ளிப் படிப்பிற்குப் பின்னர் கொல்கத்தாவிலுள்ள மாகாணக் கல்லூரியில் கரிம வேதியியலில் முடித்தார். பின்னர் சட்டப் படிப்பை மேற்கொண்டு 1914இல் வழக்குரைஞர் அவையில் உறுப்பினரானார். அசாமின் முதலமைச்சராக 1950 முதல் 1957 வரை பணியாற்றிய இந்திய அரசியல்வாதியும் விடுதலை இயக்க வீரர். இவர் தமிழக ஆளுநராக சனவரி 1958 முதல் மே 1964 வரை பணியாற்றி உள்ளார்.