நீட் தேர்வில் தமிழக மாணவர் தேசிய அளவில் முதலிடம்

0
213

மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் படிப்பில் சேர நீட் தேர்வு நாடுமுழுதும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வுகளை தேசிய தேர்வு முகமை சார்பில் கடந்த மாதம் 7 ம் தேதி 13 மொழிகளில் நடத்தப்பட்டது. 499 நகரங்களில் நடைபெற்ற தேர்வில் 20.38 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் 11,45,976 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்தேர்வை 30,536 பேர் தமிழிலும் எழுதியிருந்தனர். இதில் விழப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அருகே உள்ள மேல்ஓலக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபஞ்சன். இவர் 10 ஆம் வகுப்பு வரையில் மாநில பாடத்திட்டத்தில் பயின்றுள்ளார். தற்போது நடந்து முடிந்துள்ள நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே மொத்த மதிப்பெண்களான 720க்கு 720 எடுத்து தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here