பாரதத்திலிருந்து பாகிஸ்தானுக்கு குடிபெயர்ந்தவர்கள். பாகிஸ்தான் உளவு அமைப் பான ஐ.எஸ்.ஐ. போன்றவைகள் இவர் மீது சந்தேகம் கொண்டுஇந்திய உளவாளிகள் என்று விசாரணை என்ற பெயரில் பெரிய அளவில் சித்திரவதை செய்ததால் அந்நாட்டிலிருந்து 2019 இல் வெளியேறி அமெரிக்காவில் குடியேறிவிட்டார்.பாகிஸ்தான் உளவுத்துறையின் சித்திர வதையால் மனமொடிந்து விரக்தியில் வாழ்க்கையையே முடித்துக் கொள்ளலாம் என்று இருந்த போது ஶ்ரீ கிருஷ்ணர் என் கரம் பிடித்து எனக்கு நம்பிக்கை அளித்தார் என்கிறார் முஹம்மத் ஷாயன் அலி.தன்னைக் கைவிட்டுவிடாத இஸ்கான் அமைப்புக்கும் நன்றி தெரிவிக்கிறார்.கடந்த 2 ஆண்டுகளாக தனது முன்னோர்களின் கலாச்சாரம் வாழ்க்கை முறையினைப் பற்றி கற்று வந்ததாகவும், இன்று “கர் வாபஸி” தாய் வீடு திரும்பி விட்டதாகவும் அறிவிக்கிறேன் என்று டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.தனது முன்னோர்கள் உறவினர்கள் பிறந்த புண்ணிய பூமிக்கு (பாரதத் திற்கு) செல்ல இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.இன்றைய நாளை நினைத்து நான் பெருமை அடைகிறேன். இறுதியில் எனது வேர்களைத் தேடி வந்து விட்டேன். எனது முன்னோர்கள் கூட மிகுந்த பெருமை கொள்வார்கள் என்று முஹம்மத் ஷாயன் அலி தனது டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.