#கா_அப்பாத்துரை #Ka_Appadurai

0
185

குமரி மாவட்டத்தின் ஆரல்வாய்மொழி என்ற ஊரில் ஜூன் 24, 1907ஆம் ஆண்டு பிறந்தார். இவரது இயற்பெயர், நல்லசிவம்.திருநெல்வேலி மற்றும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் இந்தி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் காரைக்குடியை அடுத்த அமராவதிப் புதூர் குருகுலப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். அப்போது அங்கு மாணவராக இருந்த கவிஞர் கண்ணதாசன் இவரிடம் கல்வி பயின்றார்.சென்னை பச்சையப்பன் கல்லூரியில் சில காலம் ஆசிரியராகப் பணிபுரிந்தார் சிறுகதைகள், இலக்கியத் திறனாய்வு நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், நாடகம், பொது அறிவு நூல், அகராதி, உரைநூல், குழந்தை இலக்கிய நூல் என பல்வேறு களங்களிலும் தனி முத்திரைப் பதித்தார். ‘இந்தியாவின் மொழிச்சிக்கல்’ என்ற நூலைப் படைத்தார்.தமிழ் இலக்கியம், தமிழக வரலாறு குறித்த ஆராய்ச்சிகளில் கண்டறிந்தவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் ஆராய்ச்சி நூல்களாக எழுதினார். இவற்றில் ‘குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு’ மற்றும் ‘தென்னாட்டுப் போர்க்களங்கள்’ ஆகிய நூல்கள் சிறந்த படைப்புகளாகப் போற்றப்பட்டன. ‘உலக இலக்கியங்கள்’ என்ற தனது நூலில் பாரசீகம், உருது, பிரெஞ்சு, தெலுங்கு உள்ளிட்ட 10 மொழிகளின் இலக்கியங்களை ஆராய்ந்து பல அரிய செய்திகளை வழங்கியுள்ளார். உலகின் ஆதி மொழி தமிழ் என்றும், உலகின் முன்னோடி இனம் தமிழ் இனம் என்று அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து தனது கருத்தை வெளியிட்டார்.அறிவுச் சுரங்கம், தென்மொழித் தேர்ந்தவர், சிறந்த சிந்தனையாளர், சிறந்த சொற்பொழிவாளர், கனிந்து முதிர்ந்து பழுத்த பேரறிவாளர் என்றெல்லாம் போற்றப்பட்ட பன்மொழிப் புலவர் கா.அப்பாத்துரை 1989-ம் ஆண்டு 82-வது வயதில் மறைந்தார்.

#சான்றோர்தினம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here