இந்தியா சுதந்திரம் பெற்று 75வது கொண்டாடும் நேரத்தில், இப்பல்கலை நூற்றாண்டு விழாவை கொண்டாடுகிறது. இப்பல்கலை என்பது ஒரு இயக்கம் போல் செயல்படுகிறது. தனது உயர்ந்த மாண்புகளை டில்லி பல்கலை எப்போதும் நிறைவேற்றி உள்ளது சர்வதேச ஜிடிபியில், இந்தியாவிற்கு முக்கிய பங்கு உண்டு. தற்போது, உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளது. நமது வழிகாட்டி சக்திகளாக இளைஞர்கள் உருவாகி உள்ளனர். கல்வியின் நோக்கம் மாறிவிட்டது. நமது மாணவர்கள் என்ன கற்க விரும்புகின்றனர் என்பதில் கவனம் திரும்பி உள்ளது. இளைஞர்களுக்கு புதிய கல்விக்கொள்கை மிகப்பெரிய அளவில் உதவும். 20ம் நூற்றாண்டில், சுதந்திர போராட்டத்திற்கு உத்வேகம் கிடைத்தது. 21ம் நூற்றாண்டு, இந்தியாவின் வளர்ச்சி வேகத்திற்கு உத்வேகம் அளிக்கும். இந்தியாவில் சமீப ஆண்டுகளில் ஐஐடி.,கள், ஐஐஎம்.,கள், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இவை, புதிய இந்தியாவின் கட்டமைப்புகளாக உள்ளன. கல்வித்துறையில், அரசின் கொள்கைகள் காரணமாக, இந்திய பல்கலைக்கழகங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்து உள்ளது. இந்திய இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.