பாக்கிஸ்தான் போதைப்ன் பொருள் கடத்தல்காரன் சுட்டுக்கொலை – ‘ஹெராயின்’ பறிமுதல்

0
126

ஜம்மு – காஷ்மீரில், சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள சம்பா மாவட்டத்தில், நம் அண்டை நாடான பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர், 4 கிலோ ஹெராயினை அத்துமீறி கடத்த முயற்சித்தார். நம் எல்லை பாதுகாப்புப் படையினர், அந்நபருக்கு பலமுறை எச்சரிக்கை விடுத்தும், அவர் நம் பகுதிக்குள் ஊடுருவினார். இதைஅடுத்து, பாதுகாப்புப் படையினர் அவரை சுட்டுக் கொன்றனர். அவரது உடைமைகளை சோதனையிட்டு, 4 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு 28 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இப்பகுதியில் வேறு யாரேனும் ஊடுருவி உள்ளனரா என்பதை கண்டறிய, பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here