காஷ்மீரில் 400 அடி நீளமுள்ள தேசிய கொடியுடன் மாணவர்கள் பேரணி

0
232

75-வது ஆண்டு சுதந்திரதின நிறைவு விழாவையொட்டி கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் வீடுகள்தோறும் அனைவரும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் வீடுகளில் ஏற்றப்பட்ட தேசிய கொடியுடன் ‘செல்பி’ எடுத்து மத்திய அரசின் பிரத்யேக இணையதளத்தில் பதிவேற்ற பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் மக்கள் வீடுகளில் தேசிய கொடி ஏற்றுவதை ஊக்குவிக்கும் விதமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசிய கொடி பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் 400 அடி நீளம் கொண்ட பிரமாண்ட தேசிய கொடியுடன் மக்கள் பேரணி சென்றனர். ராணுவம் மற்றும் போலீசார் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பேரணியில் மாணவர்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here