இந்தியா  உலகத் தலைவர், G20 வழிகாட்டி புத்தக வெளியீடு நிகழ்ச்சி.

0
151

காரைக்குடியில் 29 ஆகஸ்ட் 2023 இன்று காலை  10 மணி அளவில்நடைபெற்ற , நிகழ்ச்சியில்  சிறப்பு  விருந்தினராக மத்திய சாலை போக்குவரத்து,  நெடுஞ்சாலை மற்றும் விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் மாண்புமிகு வி கே சிங் அவர்கள் கலந்து கொண்டார். நிகழ்ச்சியின் முதல் நிகழ்வாக முனைவர் ஆதலையூர் சூரியகுமார் மற்றும் திரு மனோஜ் அவர்கள் எழுதிய ( “INDIA- The World Leader, G20 Guide Book”) “இந்தியா  உலகத் தலைவர், G20 வழிகாட்டி புத்தகம்”  என்கிற புத்தகத்தின் முதல் பிரதியை  மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் வி கே சிங் அவர்கள் திருகரங்களால்  வெளியிட, அதனை பிஜேபி யின் முன்னாள் தேசிய செயலாளர்  H ராஜா அவர்கள், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தென்பாரத செய்தி தொடர்பாளர் ஸ்ரீராம் அவர்கள், மற்றும்  தென் தமிழக செய்தி தொடர்பாளர் சூர்யநாராயணன் அவர்கள்,ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்நிகழ்வில் அமைப்பின் மாநில மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here