மணிப்பூரில், மே 3ம் தேதி முதல், இட ஒதுக்கீடு தொடர்பாக மெய்டி – கூகி பிரிவினரிடையே மோதல் வெடித்தது.இதில், 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதை தொடர்ந்து பழங்குடியின இளம் பெண்கள் நிர்வாணமாக அழைத்து வரப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், பாதிக்கப்பட்ட பெண்களின் உடல்நிலை மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய மணிப்பூர் மாநில தலைமை செயலாளர், காவல்துறை டி.ஜி.பி.ஆகியோர் 4 வாரங்களில் அறிக்கை தரவும் உத்தரவிட்டது. தற்போது இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை 27 எப்.ஐ.ஆர்.,எனப்படும் முதல் தகவல் அறிக்கையும், பெண்களுக்கு எதிராக 19 வன்கொடுமை வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.