‛ஜி 20′ மாநாடு நடைபெற உள்ளதால் ‛நீட்’ தேர்வு ஒத்தி வைப்பு

0
109

‘ஜி – 20’ மாநாடு நடைபெற உள்ளதால், ‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ என்ற உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளுக்கான, ‘நீட்’ தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. முதுநிலை மருத்துவ படிப்புக்கு பின், டி.எம்., – எம்.சி.ஹெச்., – டி.என்.பி., உள்ளிட்ட உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, தேசிய தகுதிக்கான, நீட் – எஸ்.எஸ்., என்ற நுழைவுத் தேர்வு உண்டு. இந்தாண்டுக்கான நீட் தேர்வு வரும் 9, 10ம் தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில், உயர் சிறப்பு படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக, தேசிய தேர்வு வாரியம் அறிவித்துள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here