ராணுவ அதிகாரிகளை சுட்டுக்கொன்ற 2 லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் சுற்றிவளைப்பு

0
185

காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் பகுதியில் நேற்று முன்தினம் ராணுவ வீரர்களுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 4 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து அங்கு கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு பயங்கரவாதிகளை பிடிப்பதற்கான தேடுதல் வேட்டை அதிகப்படுத்தியது இந்த தேடுதல் வேட்டை நேற்று 2-வது நாளாக தொடர்ந்தது. இந்த நிலையில் ராணுவ அதிகாரிகளை சுட்டுக்கொன்ற லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் நேற்று மாலை சுற்றிவளைத்தனர். இது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here