உலகை இடதுசாரி இடரிலிருந்து விடுவிக்க வேண்டிய பொறுப்பு பாரதத்திற்கே – டாக்டர் மோகன் பாகவத்ஜி
புனே 17 செப்டம்பர் 2023
கலாச்சார மார்க்சியவாதம் என்ற பெயரில் இடதுசாரி சிந்தனையாளர்கள் உலகம் முழுவதையும் அழிவு பாதையில் கொண்டு செல்வதோடு இடதுசாரிகளின் இத்துயரத்தில் இருந்து உலகத்தை விடுவிக்க வேண்டிய பொறுப்பு பாரதத்திற்கு உள்ளது என ராஷட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் ஸர்சங்க சாலக் டாக்டர் மோகன் பாகவத்ஜி கூறினார்.
எழுத்தாளர் அபிஜித் ஜோக் அவர்கள் எழுதிய “ஜகாலா போக்கர்ணாரி டாவி வாள்வி” என்ற மராட்டி நூலை மோகன்ஜி பாகவத் தன் திருக்கரத்தால் விஸ்வ பவனத்தில் நடைபெற்ற இலக்கிய கருத்தரங்கில் வெளியிட்டார். திலீப்ராஜ் பதிப்பகத்தார் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளனர். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சாந்தி ஸ்ரீ பண்டித், திலீப்ராஜ் பதிப்பகத்தின் மேலாளர் ராஜிவ் பர்பே, அபிஜித் ஜோக் மற்றும் பல அறிஞர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். திருவிளக்கு ஏற்றி நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
இடதுசாரிகள் உலகத்தில் திருமண உறவுகளுக்கு விரோதமாக, குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் திருமண விரோத நிகழ்வுகளினால் பெரிய அழிவு ஏற்பட்டுள்ளது கருத்துருவாக்கம் என்ற பெயரில் சமுதாயத்தில் தவறான கருத்துக்கள் பரப்பும் முயற்சியை இடதுசாரிகள் ஆரம்பித்துள்ளனர். இதனால் சமுதாயத்திற்கு மிகுந்த துயரம் ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி மனிதகுலம் ஒழுக்க நெறியில் இருந்து விலகி விலங்குகள் சூழ்நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இடதுசாரிகளின் இந்த கொடும் துயரம் பாரத நாட்டிலும் பரவி வருகின்றன. சமுதாயத்தில் மட்டுமின்றி வீடுகளிலும் இது சென்றடைந்திருக்கின்றன. ஆகவே பாரதிய சமுதாயம் மிகுந்த விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது மிகவும் அவசியம். என டாக்டர் பாகவத்ஜி தெரிவித்தார்.
இன்று நம்மிடையே காணப்படுகின்ற நெருடல்கள் அது புதியவை அல்ல தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலும் இந்தப் போட்டி பொறாமைகள் இருந்து வந்தன அதனுடைய புது வடிவம் தான் தற்பொழுது காணப்படுகிறது. இடதுசாரிகளின் இந்த இடரைக்களைந்து பாரத பண்பாடும் சனாதனத்தினுடைய பெருமையும் உணர்த்தி நாம் காப்பாற்ற வேண்டும். இடதுசாரிகளின் இந்த கருத்து உருவாக்கத்திற்கு எதிராக சத்தியம், கருணை, கற்பு, தபஸ், போன்ற விஷயங்களை சமுதாயத்தில் அங்கீகரிக்க செய்ய வேண்டும். நம்முடைய சனாதன தர்மத்தின் கோட்பாடுகள் புதிய தலைமுறையினருக்கு சென்றடைய வேண்டும். பாரத நாடு பண்டையகாலத்திலிருந்து இந்த துயரை எதிர்கொண்டு வருகின்றன மட்டுமின்றி இந்த துயரிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் சக்தியும் பாரத சமுதாயத்திற்கு இருக்கிறது.
சனாதன தர்மத்தின் வழியில் சென்று சமுதாயம் முழுவதும் இந்த வேலை செய்ய முடியும் இதற்காக ஏராளமான புத்தகங்கள் எல்லா மொழியிலும் வெளியிட வேண்டும். ஏனைய மார்க்கங்கள் வாயிலாக நமது கலாச்சாரத்தையும் சிந்தனைகளையும் வீடுகளுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட இயக்கத்தினுடைய வேலை மட்டுமல்ல முழு சமுதாயத்தின் பொறுப்பாகும். இது நம்முடைய தேசத்திற்கு மட்டுமின்றி உலகம் முழுவதிலும் இந்த துயரத்தில் இருந்து நாம் அவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
டாக்டர் சாந்தி ஸ்ரீ பண்டிட் அவர்கள் பேசும் பொழுது இடதுசாரிகள் தங்களுடைய கருத்துக்களை முன்னெடுத்துச் செல்வதற்காகவும் அதை நடைமுறைப்படுத்துவதற்காகவும் புதிய திட்டங்களை தயார் செய்துள்ளனர். இடதுசாரிகளின் இந்த திறன்மிகு கருத்துகளுக்கு பதில் அளிக்கும் வகையில் நாம் இதுபோன்ற வலுவான கருத்து உருவாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். நம்முடைய சிந்தனை, நம்முடைய மதிப்பு உலகத்தில் முன்னால் வைக்க நாம் சிறிதும் பயப்பட வேண்டியதில்லை.
நிகழ்ச்சியில் பேசிய அபிஜித் ஜோக் பொறாமை, துவேஷம், அராஜகம் இவைகள் இடதுசாரிகளின் எண்ணங்களாகும். இந்த சிந்தனைகளால் உலகத்தை எந்த அளவுக்கு அழிவின் பாதையில் எடுத்துச் செல்கிறார்கள் என்பதை நான் இந்த புத்தகத்தில் மிக விரிவாக கொடுத்திருக்கிறேன்.
ராஜீவ் பர்பே நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். இலக்கிய கருத்தரங்கின் சார்பாக அதன் நிறுவனர் டாக்டர் ஷா.பா மஜும்தார் மற்றும் டாக்டர் வித்யா ஏர்வடேக்கர், டாக்டர் மோகன் பாகவத் அவர்களை கௌரவித்தனர். மிலிந்த் குல்கர்ணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மதுமிதா பர்பே அனைவருக்கும் நன்றி கூறினார்.