குற்றவாளிகள் நிச்சயம் கைது செய்யப்படுவார்கள்” – மணிப்பூர் முதல்வர் பைரேன் சிங் 

0
2439

மணிப்பூரில் கடந்த மே மாதம் குக்கி மற்றும் மெய்தி இன மக்கள் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் 175 பேர் கொல்லப்பட்டனர். இதை தொடர்ந்து இரு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ காட்சி சமூகவலைதளத்தில் பரவி நாட்டை அதிர வைத்தது. இதற்கிடையே கடந்த ஜூலை மாதம் 6ம் தேதி இம்பாலை சேர்ந்த பிஜாம் ஹேமன்ஜித் (வயது 20), ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி (வயது17) ஆகிய 2பேர் ஆயுதம் ஏந்திய கும்பலால் கடத்தப்பட்டனர். இருவரும் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து சிபிஐ விசாரிக்க அம்மாநில அரசு உத்தரவிட்டது. இது குறித்து நிருபர்கள் கேள்விக்கு, ” குற்றவாளிகள் நிச்சயம் பிடிபடுவார்கள் ”என அம்மாநில முதல்வர் பைரேன் சிங் உத்தரவாதம் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here