தேசத்தந்தை மஹாத்மா காந்தியின் 155 வது பிறந்த தினம் இன்று(அக்.,02). நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்தார் காந்தி. 78வது வயதில் காலமானார். காந்திஜெயந்தியையொட்டி, டில்லி ராஜ்காட்டில் உள்ள காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, காங்கிரஸ் தலைவர் கார்கே, லோக்சபா தலைவர் ஓம் பிர்லா, டில்லி கவர்னர் சக்சேனா உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.