இந்தியா சீனா இடையே லடாக்கின் அசல் எல்லைக் கோடு பகுதியில் பதற்றமான சூழல்

0
99

இந்தியா சீனா இடையே லடாக்கின் அசல் எல்லைக் கோடு பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதையடுத்து, இந்தியாவின் ஆயுதப்படைகளுக்கு நவீன ஆயுதங்கள் வாங்குவதற்கு 23 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.அவசர கால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் ஆயுதங்கள், டிரோன்கள், ஏவுகணைகள், ராடார் உள்ளிட்ட கண்காணிப்பு கருவிகள், தகவல் தொடர்பு சாதனங்கள், மற்றும்வாகனங்கள் வாங்குவதற்கான பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இதில் அதிகபட்சமாக ராணுவத்துக்கு 70 முக்கிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. கடற்படைக்கு 65 ஒப்பந்தங்களும் விமானப்படைக்கு 35 ஒப்பந்தங்களும்
போடப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here