கோனேரிராஜபுரத்தில் 10ம் நுாற்றாண்டு சிலை கண்டுபிடிப்பு

0
109

மயிலாடுதுறை மாவட்டம் கோனேரிராஜபுரத்தில் உள்ள வயல்வெளியை ஒட்டியுள்ள பகுதியில் கிடந்த சிற்பத்தை ஆய்வு செய்தனர் . அதில், கோனேரி ராஜபுரம் வரலாற்றில் திருநல்லம் என்று அழைக்கப்பட்டுள்ளது. 3.5 அடி உயரமும், 2.5 அடி அகலமும் கொண்ட அந்த சிற்பம், 10ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் கால மூத்த தேவியான தவ்வை என கண்டறிந்தனர். தேவி சிலையின் இடது பக்கத்தில் மகன் மாந்தன் சன்னவீரம் தரித்தும், வலது பக்கத்தில் மகள் மாந்தி சுகாசனத்தில் அமர்ந்த கோலத்திலும் உள்ளனர். பல்லவர்களின் ஆட்சியில், தமிழர்களின் தாய் தெய்வமாக மூத்த தேவி வழிபாட்டில் இருந்துள்ளது. பிற்கால சோழர்கள் காலத்திலும், சேட்டை என்ற பெயரில் மூத்த தேவி வழிபாடு நடந்துள்ளதாக கல்வெட்டு சான்றுகள் கூறுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here